Child Wellbeing in an Unpredictable World – யுனிசெஃப்
May 27 , 2025 39 days 101 0
“Report Card 19: Child Wellbeing in an Unpredictable World” என்ற தலைப்பிலான இந்த ஒரு அறிக்கையானது 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் தரவுகளை ஒப்பிட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் உலகளாவியப் பொது முடக்கம் ஆகியவை, 43 OECD மற்றும் EU நாடுகளில் குழந்தைகளை எவ்வாறு பாதித்தன என்பது குறித்த முக்கியக் கண்ணோட்டத்தினை இது வழங்குகிறது.
முதல் மூன்று இடங்களில் உள்ள நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் பிரான்சு ஆகியவை மனநலம், உடல் ஆரோக்கியம் மற்றும் திறன்களிலும் முன்னணியில் உள்ளன.
43 நாடுகளில், 15 வயதுடைய சுமார் 8 மில்லியன் குழந்தைகள் செயல்பாட்டு ரீதியாக கல்வியறிவு மற்றும் எண்ணியல் கல்வியறிவு கொண்டிருக்கவில்லை என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
பல்கேரியா, குரோஷியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை மனநலத்தில் முன்னணி இடத்தைப் பிடித்திருந்தாலும், உடல் ஆரோக்கியத்தில் மிகக் குறைந்த அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளன.
ஜப்பான், தென் கொரியக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகியவை திறன்களில் மூன்றாவது முன்னணி இடத்தில் இருந்தாலும், மனநலத்தில் அவை கடைசியிலிருந்து மூன்றாவது இடத்தில் உள்ளன.
செக் குடியரசு மற்றும் ஐஸ்லாந்து உடல் ஆரோக்கியத்தில் முன்னணி இடத்திலும், மன ஆரோக்கியம் மற்றும் திறன்கள் ஆகிய இரண்டிலும் அவை கடைநிலை இடங்களிலும் உள்ளன.
32 நாடுகளுள், 14 நாடுகளில் குழந்தைகளின் வாழ்க்கை பூர்த்தி/திருப்தி நிலை மிகவும் கணிசமாகக் குறைந்து வருகிறது.
கிடைக்கப் பெற்றத் தரவுகளுடன், 43 நாடுகளுள் 14 நாடுகளில் அதிக உடல் எடை கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பதோடு இது மிக நீண்ட காலப் போக்காகத் தொடர்கிறது.
2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இளம் பருவத்தினரிடையே தற்கொலை விகிதம் 18 நாடுகளில் குறைந்திருந்தாலும், 17 நாடுகளில் அது அதிகரித்து உள்ளது.