TNPSC Thervupettagam

Child Wellbeing in an Unpredictable World – யுனிசெஃப்

May 27 , 2025 39 days 100 0
  • Report Card 19: Child Wellbeing in an Unpredictable World” என்ற தலைப்பிலான இந்த ஒரு அறிக்கையானது 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் தரவுகளை ஒப்பிட்டுள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் உலகளாவியப் பொது முடக்கம் ஆகியவை, 43 OECD மற்றும் EU நாடுகளில் குழந்தைகளை எவ்வாறு பாதித்தன என்பது குறித்த முக்கியக் கண்ணோட்டத்தினை இது வழங்குகிறது.
  • முதல் மூன்று இடங்களில் உள்ள நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் பிரான்சு ஆகியவை மனநலம், உடல் ஆரோக்கியம் மற்றும் திறன்களிலும் முன்னணியில் உள்ளன.
  • 43 நாடுகளில், 15 வயதுடைய சுமார் 8 மில்லியன் குழந்தைகள் செயல்பாட்டு ரீதியாக கல்வியறிவு மற்றும் எண்ணியல் கல்வியறிவு கொண்டிருக்கவில்லை என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
  • பல்கேரியா, குரோஷியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை மனநலத்தில் முன்னணி இடத்தைப் பிடித்திருந்தாலும், உடல் ஆரோக்கியத்தில் மிகக் குறைந்த அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளன.
  • ஜப்பான், தென் கொரியக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகியவை திறன்களில் மூன்றாவது முன்னணி இடத்தில் இருந்தாலும், மனநலத்தில் அவை கடைசியிலிருந்து மூன்றாவது இடத்தில் உள்ளன.
  • செக் குடியரசு மற்றும் ஐஸ்லாந்து உடல் ஆரோக்கியத்தில் முன்னணி இடத்திலும், மன ஆரோக்கியம் மற்றும் திறன்கள் ஆகிய இரண்டிலும் அவை கடைநிலை இடங்களிலும் உள்ளன.
  • 32 நாடுகளுள், 14 நாடுகளில் குழந்தைகளின் வாழ்க்கை பூர்த்தி/திருப்தி நிலை மிகவும் கணிசமாகக் குறைந்து வருகிறது.
  • கிடைக்கப் பெற்றத் தரவுகளுடன், 43 நாடுகளுள் 14 நாடுகளில் அதிக உடல் எடை கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பதோடு இது மிக நீண்ட காலப் போக்காகத் தொடர்கிறது.
  • 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இளம் பருவத்தினரிடையே தற்கொலை விகிதம் 18 நாடுகளில் குறைந்திருந்தாலும், 17 நாடுகளில் அது அதிகரித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்