தமிழ்நாடு அரசானது அதன் மாநில சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உயர்நிலை மருத்துவ நடைமுறைகளுக்கான அணுகலைக் கணிசமாக மேம்படுத்தி உள்ளது.
முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ் 18,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் போன்ற உயர்நிலை நடைமுறைகளை மேற்கொண்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு ஜனவரி 11 முதல் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை மொத்தம் 18,182 பேர் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மொத்தத் தொகை 1,556.35 கோடி ரூபாய் ஆகும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் பயன் பெற்றனர் (6,524) என்ற நிலையில்அதைத் தொடர்ந்து காக்லியர் உள்வைப்புகள் (6,276) தொடர்பான சிகிச்சைகள் உள்ளன.
செலவிடப்பட்ட தொகையின் அடிப்படையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிகச் செலவினம் ஏற்பட்டது (515.83 கோடி ரூபாய்).
CMCHIS திட்டத்தின் கீழ், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 22,00,000 ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.