TNPSC Thervupettagam

CMS COP15 – புதிய இனங்கள் பாதுகாப்பு

April 2 , 2026 5 days 75 0
  • பிரேசிலில் நடைபெற்ற CMS COP15 மாநாடு, அதிகரித்து வரும் அழிவு அபாயங்களின் காரணமாக, பாதுகாக்கப்பட்ட பட்டியலில் 40 புதிய வலசை போகும் உயிரினங்களைச் சேர்த்தது.
  • புலம்பெயரும் இனங்கள் மீதான மாநாடு (CMS) என்பது தேசிய எல்லைகளைத் தாண்டி இடம்பெயரும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • சிவிங்கிப் புலி, வரி கழுதைப்புலி, பனி ஆந்தை, இராட்சத நீர்நாய் மற்றும் பெரிய சுத்தியல்தலை சுறா போன்றவை பாதுகாப்பிற்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.
  • ஒரு சமீபத்திய உலகளாவிய அறிக்கையின்படி, சுமார் 49% புலம்பெயரும் இனங்கள் குறைந்து வரும் நிலையில் மேலும் 24% இனங்கள் அழியும் அபாயத்தை எதிர் கொள்கின்றன.
  • வாழ்விட இழப்பு, பருவநிலை மாற்றம், மாசுபாடு, சட்டவிரோத வேட்டை, அதிகப் படியான மீன்பிடித்தல் மற்றும் புலம்பெயரும் பாதைகளில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவை முக்கிய அச்சுறுத்தல்களாகக் கருதப்படுகின்றன.
  • பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் மீன்கள் என சுமார் 188 புலம்பெயரும் இனங்கள் தற்போது அழியும் நிலையில் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்