கார்பன் டை ஆக்சைடைப் (CO2) பெற்று, உயிரினத்திரளை உற்பத்தி செய்யவும் மற்றும் உயிரி ஆற்றலை உருவாக்கவும் இந்திய தொழில்நுட்பக் கழகம் குவஹாத்தி இரண்டு-கட்ட நுண்பாசி செயல்முறையை உருவாக்கியுள்ளது.
முதல் கட்டத்தில் விரைவான நுண்பாசி வளர்ச்சிக்காக 15 சதவீத CO2 பயன்படுத்தப் படுகிறது, அதே நேரத்தில் இரண்டாவது கட்டத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸுடன் 5 சதவீத CO2 பயன்படுத்தப்படுகிறது.
இந்த செயல்முறையானது வழக்கமான முறைகளை விட 25.7 சதவீதம் அதிக உயிரினத்திரள் உற்பத்தி மற்றும் 35.4 சதவீதம் அதிக CO2 நிலைநிறுத்தலை அடைந்தது.
இது 1.86 மடங்கு அதிக கொழுப்பு உற்பத்தி மற்றும் 37.65 சதவீதம் அதிக உயிரி ஆற்றல் திறனையும் பதிவு செய்துள்ளது.
கால்சியம் சுய-திரட்டலை ஊக்குவித்தது, குறைந்த ஆற்றல் பயன்பாட்டுடன் 98.46 சதவீத நுண்பாசி உயிரினத்திரளை மீட்டெடுக்க உதவுகிறது.