எஸ். என். போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம் (SNBNCBS) மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மறைந்திருக்கும் புற்றுநோய் தண்டு போன்ற செல்களை (cancer stem-like cells) அடையாளம் காண ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.
புதிய கட்டமைப்பான ACSCeND (செயற்கை நுண்ணறிவு சார்ந்த புற்றுநோய் தண்டு செல் போன்ற செல்களின் பண்புருவாக்கி மற்றும் நியோபிளாசம் பிரித்தறியும் செயல்முறை), முகிழ்த் திறன் கொண்டவை போன்ற(pluripotent-like), பலவகைத் திறன் கொண்டவை போன்ற (multipotent-like) மற்றும் மற்றும் ஒருவகைத் திறன் கொண்டவை போன்ற (unipotent-like) ஆகிய மூன்று வளர்ச்சி நிலைகளை அடையாளம் காட்டுகிறது.
இது வழக்கமான பெரும் அளவிலான ஆர்.என்.ஏ (RNA - ரிபோநியூக்ளிக் அமிலம்) வரிசைமுறைத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய முடியும், இது ஆயிரக்கணக்கான நோயாளிகளின் மாதிரிகளில் மறைக்கப்பட்ட செல் எண்ணிக்கையை ஆய்வு செய்ய அனுமதிக்கிறது.
TCGA (புற்றுநோய் மரபணுத் தொகுப்பு வரைபடம்) மற்றும் ப்ரீகாக் (PRECOG) உள்ளிட்ட தரவுத்தளங்களிலிருந்து 25,000-க்கும் மேற்பட்ட பெரும் அளவிலான மாதிரிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் ACSCeND-ஐ பயன்படுத்தினர்.
அதிக வீரியம் கொண்ட, முகிழ்த் திறன் கொண்டவை போன்ற புற்றுநோய் தண்டு செல்களைக் கொண்ட கட்டிகள் மோசமான உயிர்வாழ்வு விகிதம், அதிக கட்டி மீண்டும் வருவதற்கான வாய்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சைக்கு குறைவான பதிலளிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவையாக இருந்தன.
இந்தக் கட்டமைப்பானது, நோய் மீண்டும் வருவதற்கான அதிக அபாயத்தில் உள்ள நோயாளிகளை அடையாளம் காணவும், துல்லியமான புற்றுநோய் சிகிச்சைகளை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கவும் உதவும்.