நிதி ஆயோக், அடல் புத்தாக்கத் திட்டம் (AIM - Atal Innovation Mission), மற்றும் தேசியத் தகவல் மையம் ஆகியவை இணைந்து “CollabCAD” என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளன.
இந்த முன்னெடுப்பானது இருபரிமாண வரைவு மற்றும் முப்பரிமாண பொருள் வடிவங்களின் அடிப்படையில் தீர்வுகளைக் காண்பதற்கான ஒரு தளத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது முப்பரிமாண வடிவங்களை உருவாக்கி, அவற்றை மாற்றி அமைப்பதற்காக அடல் மேம்படுத்து ஆய்வகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு தளத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.