இந்தியப் பிரதமர் கொரானா வைரஸிற்கு எதிராகப் போராடுவதற்காக “சப்தபதி” என்ற ஒன்றை அறிவித்துள்ளார்.
சப்தபதி என்பது கொரானா வைரஸிற்கு எதிராகப் போராடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட 7 மந்திரங்களாகும்.
தமிழ்நாடு, பஞ்சாப், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்களது ஊரடங்கை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளன.
அதே சமயத்தில், மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.
பொது மக்களுக்கான சட்டம் ஒழுங்கானது மாநிலப் பட்டியலில் உள்ளது. இதனைச் செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது.
எனவே, மாநில அரசுகள் ஊரடங்கிற்கு வெவ்வேறு தேதிகளை அறிவித்துள்ளன.
இருப்பினும், மத்திய அரசானது 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கை அறிவித்துள்ளது.
இதனைச் செயல்படுத்துவதற்காக, மத்திய அரசானது கோவிட் – 19 தொற்றை “அறிவிக்கப்பட்ட ஒரு பேரிடராக” அறிவித்துள்ளது.