நிதி ஆயோக் அமைப்பானது பாரத் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தின் சமூகநலப் பிரிவான பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து 2021-22 ஆம் ஆண்டிற்கான Convoke எனும் கருத்தரங்கினைத் தொடங்கியுள்ளது.
Convoke என்பது இந்தியா முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் கல்வியை வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்வதையும் அதன் தரத்தை வலுப்படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Convoke மூலமாக தற்போது அவர்கள் தங்களது சிறிய ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ள இயலும்.
இந்த ஆய்வுக் கட்டுரைகளை கல்வியாளர் குழுமம் ஆய்வு செய்யும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்தப்பட உள்ள தேசிய ஆராய்ச்சிக் கருத்தரங்கின் போது சமர்ப்பிக்கப்படும்.