TNPSC Thervupettagam

COSPAR விக்ரம் சாராபாய் பதக்கம் 2026

August 6 , 2026 6 days 125 0
  • விண்வெளி ஆராய்ச்சிக்கான தனது பங்களிப்பிற்காக வானியற்பியல் அறிவியலாளர் அன்னபூர்ணி சுப்பிரமணியம் 2026 ஆம் ஆண்டிற்கான COSPAR விக்ரம் சாராபாய் பதக்கத்தைப் பெற்றார்.
  • இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களை கௌரவிக்கும் வகையில் விக்ரம் சாராபாய் பதக்கம் 1990 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • வளரும் நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சிக்கான குழு (COSPAR) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆகியவை இணைந்து இந்தப் பதக்கத்தை வழங்குகின்றன.
  • இந்தப் பதக்கத்தைப் பெறும் 4வது இந்தியர் மற்றும் முதல் இந்திய பெண் அறிவியலாளர் என்ற பெருமையை அன்னபூர்ணி சுப்பிரமணியம் பெற்றுள்ளார்; மேலும் இவ்விருதைப் பெறும் மூன்றாவது பெண் இவராவார்.
  • யு.ஆர்.ராவ் (1996), குர்பக்ஸ் சிங் லகினா (2014), மற்றும் அனில் பரத்வாஜ் (2024) ஆகியோர் இந்தப் பதக்கத்தைப் பெற்ற பிற இந்தியர்கள் ஆவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்