TNPSC Thervupettagam

CPA மண்டலம் VII மாநாடு 2026

April 13 , 2026 5 days 109 0
  • காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் (CPA) இந்தியப் பிராந்திய மண்டலம் VII-இன் 2026-ஆம் ஆண்டுக்கான மாநாடு கோவாவில் நிறைவடைந்தது.
  • இந்த மாநாடானது உள்ளடக்கிய நிர்வாகம் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
  • CPAன் கீழ் நடைபெற்ற இம்மாநாட்டில், மண்டலம் VII-ஐச் சேர்ந்த மாநிலங்களின் 51 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
  • நீலப் பொருளாதாரம், கடலோர மேம்பாடு, வர்த்தகம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
  • 1911 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் CPA, நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் சட்டமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்