TNPSC Thervupettagam

CRPFன் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு மைல்கல்

November 7 , 2026 12 days 111 0
  • மத்திய சேமக் காவல் படையானது (CRPF) 47 ஆண்டுகளில் முதல் முறையாகப் பணி சார்ந்த உயிரிழப்புகள் ஏதுமின்றி தொடர்ந்து 12 மாதங்களை நிறைவு செய்துள்ளது.
  • CRPF ஆனது 1939 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று மத்தியப் பிரதேசத்தின் நீமுச்சில் அரசப் பிரதிநிதியின் காவல்துறை (Crown Representative’s Police) என நிறுவப்பட்டது.
  • இது 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் மத்திய சேமக் காவல் படை என மறுபெயரிடப்பட்டது, மேலும் இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • உள்நாட்டுப் பாதுகாப்பைப் பராமரித்தல், கலவரங்களைக் கட்டுப்படுத்துதல், கிளர்ச்சி மற்றும் நக்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தேர்தல்களின் போது பாதுகாப்பு வழங்குதல் ஆகியவை இதன் முக்கியப் பணிகளாகும்.
  • CRPF இயக்குநர் ஜெனரல் ஜி.பி.சிங் அவர்களின் கூற்றுப்படி, கடைசியாகப் பணி சார்ந்த உயிரிழப்பு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று பதிவானது.
  • 1947 ஆம் ஆண்டு முதல், 2,268 CRPF வீரர்கள் தங்களது பணியின் போது உயிரிழந்துள்ளனர்; 2010 ஆம் ஆண்டில் அதிகபட்ச வருடாந்திர உயிரிழப்புகள் (143) பதிவாகின.
  • 1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு பணி சார்ந்த உயிரிழப்புகள் இல்லாத ஆறாவது காலகட்டம் இதுவாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்