TNPSC Thervupettagam

OCI அட்டைதாரர்களின் குடியுரிமை உரிமைகள்

November 7 , 2026 11 days 107 0
  • நடிகர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியக் குடியுரிமை (OCI) அட்டைதாரரான இம்ரான் கான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட ‘இந்தியாவை விட்டு வெளியேறுக’ என்ற அறிவிப்பாணையை (Leave India Notice) பம்பாய் உயர் நீதிமன்றம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 7 வரை நிறுத்தி வைத்துள்ளது.
  • OCI அட்டைதாரர்கள் வெளிநாட்டினர் ஆவர், அவர்கள் இந்தியக் குடிமக்கள் அல்ல, எனவே அவர்கள் அரசியலமைப்பின் 19 வது சரத்தின் கீழ் உள்ள போராட்டம் செய்யும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் கோர முடியாது.
  • 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 7A-இன் கீழ், தகுதியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினர் OCI அட்டைதாரர்களாகப் பதிவு செய்யலாம்.
  • முன்னாள் இந்தியக் குடிமக்கள், அவர்களின் சந்ததியினர், குறிப்பிட்ட சில சிறார் குழந்தைகள் மற்றும் இந்தியக் குடிமக்கள் அல்லது OCI அட்டைதாரர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத்துணை (குறைந்தபட்சம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் திருமண உறவில் இருந்தவர்கள்) ஆகியோர் இதில் அடங்குவர்.
  • OCI அட்டைதாரர்கள் வாழ்நாள் முழுவதும் பலமுறை நுழையக்கூடிய விசா மற்றும் சில பொருளாதார மற்றும் கல்விப் பயன்களைப் பெறுகின்றனர், ஆனால் அவர்கள் வாக்களிக்கவோ, அரசியலமைப்புப் பதவிகளை வகிக்கவோ அல்லது இந்தியக் கடவுச்சீட்டைப் (Passport) பெறவோ முடியாது.
  • அவர்கள் இந்தியாவில் விவசாய நிலம், பண்ணை வீடுகள் அல்லது தோட்டச் சொத்துகளை வாங்க முடியாது; பத்திரிகை, சமயப்பரப்பாளர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி போன்ற சில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு அரசின் முன் அனுமதி தேவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்