TNPSC Thervupettagam

CSIR ஸ்தாபன தினம் 2026 - செப்டம்பர் 26

September 29 , 2026 12 hrs 0 min 46 0
  • அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR) 2026 ஆம் ஆண்டில் 85 ஆண்டுகளை நிறைவு செய்தது.
  • CSIR இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான ஒரு தன்னாட்சி அமைப்பாக 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று நிறுவப்பட்டது.
  • விண்வெளி, ரசாயனங்கள், உயிரி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பெருங்கடல் அறிவியல் போன்ற துறைகளில் செயல்படும் 37 தேசிய ஆய்வகங்களுடன் இது நாடு தழுவிய ஆராய்ச்சி வலையமைப்பாக செயல்படுகிறது.
  • CSIR-இன் தலைமையகம் புது தில்லியின் அனுசந்தன் பவனில் உள்ளது.
  • CSIR ஆனது சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860-இன் கீழ் ஒரு சங்கமாக பதிவு செய்யப் பட்டது.
  • இதன் ஆராய்ச்சி சுகாதாரம், ஆற்றல், விவசாயம், சுற்றுச்சூழல், பொருட்கள், விண்வெளி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்