2019 ஆம் ஆண்டு அக்டோபர் 6 அன்று, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது அறிவியல்சார் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தினால் (Council of Scientific and Industrial Research) உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகள் என்று அழைக்கப்படும் புதிய பட்டாசுகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்தப் பட்டாசுகள் ஒரே சம அளவிலான ஒளி மற்றும் ஒலியை உருவாக்குவதன் மூலம் நுண்மத் துகள்களின் உமிழ்வை 30% என்ற அளவில் குறைக்க உதவுகின்றன.
வழக்கமான பட்டாசுகள் பேரியம் நைட்ரேட் என்ற முக்கியமான மாசுபடுத்தியை வெளியிடுகின்றன.
இது தற்பொழுது பொட்டாசியம் நைட்ரேட் என்ற பொருளால் மாற்றப் பட்டுள்ளது.
பசுமையான பட்டாசுகள் நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு ஆகியவற்றின் வெளியேற்றத்தைக் குறைக்கின்றன. மேலும் இது ஒட்டுமொத்தமாக தீங்கு விளைவிக்கும் நுண் துகள்களின் உமிழ்வைக் குறைக்கின்றன.
உற்பத்தியாளர்கள் தங்களின் மூலப் பொருட்கள் மற்றும் ரசாயனங்களை சோதிப்பதற்கு வசதியாக சிவகாசியில் மூலப் பொருட்கள் கலவைப் பகுப்பாய்வு (Raw Materials Compositional Analysis - RACE) நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.