மேற்கு மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மற்றும் அலிராஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் பீல் மற்றும் பிலாலா பழங்குடியினர் அதிகம் வாழும் இடங்களில் D3 திட்டம் எனும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
திருமணங்களில் தஹேஜ் (வரதட்சணை), தாரூ (மது) மற்றும் DJ இசை போன்ற 3D விவகாரங்களுக்குச் செலவிடுவதற்காக என தனியார் கடன் வழங்குபவர்களின் கடன் நெருக்கடி வலையில் சிக்குவதிலிருந்து இந்த ஏழைப் பழங்குடியினக் குடும்பங்களைக் காப்பாற்றுவதே இதன் நோக்கமாகும்.
முன்னதாக, மிக ஏழ்மையான குடும்பங்கள் கூட வரதட்சணை, மதுபானம் மற்றும் DJ இசைக்காக 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டியிருந்தது.
அவர்கள் இந்த அதிகச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், உள்ளூர்ப் பணக் கடன் வழங்குபவர்களின் நெருக்கடியில் சிக்கினர்.