தமிழ்நாடு, டெல்லி மற்றும் கேரளா ஆகியவற்றிற்கான வருடாந்திரப் பிறப்பு விகிதம் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு விகிதத்தில் குறைந்து வருகிறது.
வருடாந்திரப் பிறப்பு விகிதமானது, மக்கள்தொகையில் 1,000 பேருக்கு எத்தனை குழந்தைப் பிறப்புகள் என வரையறுக்கப்படுகிறது.
மாதிரிப் பதிவு அமைப்பானது (SRS) 2021 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் அறிக்கையின் தரவானது, 2021 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பிறப்பு விகிதம் 19.3 ஆக இருந்ததைக் குறிப்பிடுகிறது.
இது 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் 1.12% என்ற விகிதத்தில் குறைந்து வந்தது.
அதே காலக் கட்டத்தில், தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் (CBR) ஆனது ஒவ்வோர் ஆண்டும் 2.35% என்ற விகிதத்தில் குறைந்து வந்தது.
டெல்லியின் CBR ஆனது 2.23% என்ற விகிதத்திலும், கேரளாவின் பிறப்பு விகிதம் 2.05% என்ற விகிதத்திலும் குறைந்து வந்தது.