TNPSC Thervupettagam

D3 திட்டம் - மத்தியப் பிரதேசம்

May 16 , 2025 4 days 88 0
  • மேற்கு மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மற்றும் அலிராஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் பீல் மற்றும் பிலாலா பழங்குடியினர் அதிகம் வாழும் இடங்களில் D3 திட்டம் எனும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
  • திருமணங்களில் தஹேஜ் (வரதட்சணை), தாரூ (மது) மற்றும் DJ இசை போன்ற 3D விவகாரங்களுக்குச் செலவிடுவதற்காக என தனியார் கடன் வழங்குபவர்களின் கடன் நெருக்கடி வலையில் சிக்குவதிலிருந்து இந்த ஏழைப் பழங்குடியினக் குடும்பங்களைக் காப்பாற்றுவதே இதன் நோக்கமாகும்.
  • முன்னதாக, மிக ஏழ்மையான குடும்பங்கள் கூட வரதட்சணை, மதுபானம் மற்றும் DJ இசைக்காக  1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டியிருந்தது.
  • அவர்கள் இந்த அதிகச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், உள்ளூர்ப் பணக் கடன் வழங்குபவர்களின் நெருக்கடியில் சிக்கினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்