ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அரசியலமைப்பின் 371-Fவது சரத்தில் குறிப்பிடப் பட்டு உள்ள அதற்கான மற்றும் அதன் மக்களுக்கான சிறப்பு விதிமுறைகள் மூலம் சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது.
1975 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, சிக்கிம் ஆனது 1642 ஆம் ஆண்டு முதல் நம்கியால் வம்சத்தினால் ஆட்சி செய்யப்பட்ட ஓர் இறையாண்மை கொண்ட இமயமலையின் ராட்சியமாக இருந்தது.
1947 ஆம் ஆண்டில் இந்தியாவானது சுதந்திரம் பெற்ற பிறகு, சிக்கிம் 1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பின் கீழான ஒரு பகுதியாக மாறியது.
அது அதன் உள் சுயாட்சியைத் தக்க வைத்துக் கொண்டாலும், இந்தியா அதன் வெளி விவகாரங்கள், பாதுகாப்பு துறை மற்றும் தகவல் தொடர்புகளை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.
1975 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பில், சுமார் 97 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
36வது அரசியலமைப்பு திருத்த மசோதாவானது 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு, சிக்கிம் ஆனது 1975 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதியன்று இந்திய மாநிலமாக மாறியது.