TNPSC Thervupettagam

DigiPIN - டிஜிட்டல் முகவரி முறை

May 12 , 2026 3 days 102 0
  • இந்திய தபால்துறையானது (மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம்), டிஜிட்டல் முகவரி அடையாளத்திற்காக DigiPIN (டிஜிட்டல் அஞ்சல் குறியீட்டு எண்) என்ற புதிய முறையை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • DigiPIN என்பது அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையுடன் இணைக்கப்பட்ட துல்லியமாக இருப்பிடத்தைக் கண்டறிய உதவுகின்ற 10 இலக்க புவி-குறியீட்டு டிஜிட்டல் முகவரி முறையாகும்.
  • இது தபால் சேவைகளில் முகவரித் துல்லியத்தை மேம்படுத்தி, விநியோகத்தை எளிதாக்குகிறது.
  • இந்த முறை கடிதப் போக்குவரத்து, கண்காணிப்பு, கடைசி மைல் இணைப்பு மற்றும் அவசர கால சேவைகளுக்காக இந்தியா போஸ்ட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • இது IIT ஐதராபாத் மற்றும் இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையம் (NRSC) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டதுடன் 1972 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட பாரம்பரிய 6 இலக்க பின் கோடு முறையுடன் இணைந்து செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்