DODO-வின் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்கள் - வழிகாட்டுதல்கள்
February 18 , 2019 2359 days 705 0
2019 ஆம் ஆண்டின் பெட்ரோடெக் மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியாவில் வணிகர்களுக்குச் சொந்தமான மற்றும் வணிகர்களே நிர்வகிக்கும் (DODO – Dealer Owned and Dealer Operated) அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வெளியிட்டார்.
இந்தப் புதிய வழிகாட்டுதலானது DODO கொள்கையுடன் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டு வருவதற்கான ஒரு ஆலோசகராக இது செயல்படும்.
மேலும் இது சுற்றுச்சூழலில் சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகியவற்றை ஏற்படுத்த உதவும்.
இந்தப் புதிய வழிகாட்டுதலானது நாடெங்கிலும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு எளிதில் கிடைக்கப் பெறுவதற்கு உதவும். மேலும் இது மக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் வணிக ரீதியிலான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கு மாற உதவும்.