TNPSC Thervupettagam

DPCC மற்றும் Lodhi Property Co Ltd வழக்கு

August 8 , 2025 14 days 63 0
  • மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் (PCBs) ஆனது 33A (நீர் சட்டம்) மற்றும் 31A (காற்றுச் சட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் மறுசீரமைப்பு மற்றும் இழப்பீடுகளாக நிலையான தொகைகளை விதித்து, வசூலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் சாத்தியமான சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுப்பதற்கான முன்கூட்டிய நடவடிக்கைகளாக வங்கி உத்தரவாதங்களைக் கோரலாம்.
  • அத்தகைய சேதங்களுக்கான தண்டனை விதிக்கும் அதிகாரம் துணைச் சட்டத்தில் விதிக்கப் பட்ட இயற்கை நீதியை உறுதி செய்யும் விரிவான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • நீர் மற்றும் காற்றுச் சட்டங்களின் VI மற்றும் VIIவது அத்தியாயங்களின் கீழான சட்டப் பூர்வ நடைமுறைகள் தேவைப்படும் தண்டனைக்குரிய அபராதங்களிலிருந்து மறு சீரமைப்புச் சேதங்களை நீதிமன்றம் வேறுபடுத்தியது.
  • மாசுபடுத்தும் அமைப்புகள் ஆனது கட்டணக் கொள்கைகள் சுற்றுச்சூழல் சேதம், தீர்வு நடவடிக்கை மற்றும் மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கான ஒரு இழப்பீட்டை மிக நியாயப் படுத்துகிறது.
  • PCB வாரியங்கள் உண்மையான சேதத்திற்குப் பிறகு அல்லது சாத்தியமான சுற்றுச் சூழல் தீங்கு ஏற்படும் போது முன்கூட்டியே செயல்படலாம்.
  • 33A மற்றும் 31A ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் 5வது பிரிவைப் போலவே உள்ளன என்பதோடு இது கட்டணம் செலுத்துதல் மற்றும் தீர்வுப் பயன்பாட்டிற்கான வழிமுறைகளை செயல்படுத்துகிறது.
  • PCB வாரியங்களின் அதிகாரங்கள் குறித்த உயர் நீதிமன்றத்தின் வரையறுக்கப்பட்ட விளக்கம் தற்போது ரத்து செய்யப்பட்டது.
  • தன்னிச்சையற்றத் தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையால் வழி நடத்தப்படும் அபராதங்களை விதிக்கலாமா, மீட்டெடுப்பைக் கோரலாமா அல்லது இரண்டையும் மேற்கொள்ளலாமா என வாரியங்கள் தீர்மானிக்க வேண்டும்.
  • DPCC வழங்கிய காரணக் கேட்பு அறிக்கைகளை செல்லாததாக்கிய உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்