TNPSC Thervupettagam

e-ஸ்வஸ்த்ய சாம்வாத் தளம்

December 31 , 2025 3 days 28 0
  • இராஜஸ்தான் அரசாங்கம் ஆனது மருத்துவக் கல்வியில் ஆளுகை, வெளிப்படைத் தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு டிஜிட்டல் தளமான "e-ஸ்வஸ்த்ய சம்வாத்" தளத்தினைத் தொடங்கியது.
  • இந்தத் தளம் ஆனது விரைவாக முடிவெடுப்பதற்காக கொள்கை வகுப்பாளர்கள், மருத்துவ நிறுவனங்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலிய ஊழியர்கள், மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்களை இணைக்கிறது.
  • இந்தக் கூட்டங்கள் ஆனது, வாரத்திற்கு இரண்டு முறை காணொளிக் காட்சிகள் மூலம் முதலில் மூத்த நிலை அதிகாரிகள், பின்னர் திறந்த நிலைத் தொடர்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன.
  • சுகாதாரத் திட்டங்கள், உள்கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு, முதலமைச்சர் அலுவலக உத்தரவுகள், CMIS மற்றும் CP-கிராம்கள் மூலம் குறை தீர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் ஆகியவை இதன் விவாதங்களில் அடங்கும்.
  • இராஜஸ்தான் மருத்துவக் கல்வி முறை முழுவதும் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்த அறிக்கைகள் கோரப் படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்