January 31 , 2021
1641 days
848
- இந்தியத் தேர்தல் ஆணையமானது வாக்காளர் அடையாள அட்டையின் திருத்த முடியாத டிஜிட்டல் பதிப்பை வெளியிட்டுள்ளது.
- இது மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (e-EPIC) எனப்படுகின்றது.
- இந்த e-EPIC ஆனது பிடிஎப் வடிவில் அச்சிடப்பட முடியும்.
- இது டிஜி லாக்கர் போன்றவற்றில் ஆன்லைனில் (நிகழ் நேரத்தில்) சேமிக்க முடியும்.
- இது ஆவணத்தை விரைவாக வழங்குதல் மற்றும் எளிதாக அணுகுதல் ஆகியவற்றிற்கு வழி வகை செய்கின்றது.
- வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையானது 1993 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப் பட்டது.
- அப்பொழுது இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக டிஎன் சேஷன் அவர்கள் பதவியில் இருந்தார்.
- இவர் இந்தியாவின் 10வது தலைமைத் தேர்தல் ஆணையராக (1990-1996) நியமிக்கப் பட்டார்.

Post Views:
848