மகாராஷ்டிரா மாநில அரசானது புனேவில் உள்ள எரவாடா சிறையிலிருந்து ”சிறைச்சாலை சுற்றுலாவை” தொடங்க முடிவு செய்துள்ளது.
மகாத்மா காந்தி, மோதிலால் நேரு, லோக்மானிய திலகர், பண்டித ஜவஹர்லால் நேரு, சரோஜினி நாயுடு, சர்தார் வல்லபாய் படேல் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் எரவாடா சிறையில் சிறை வைக்கப்பட்ட சில முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரர்களாவர்.