கிராமப்புறப் பெண்களுக்காக e-SafeHER என்ற இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
இது மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியன் பெண்களுக்கு டிஜிட்டல் சூழலை பாதுகாப்பாகப் பயன்படுத்தப் பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) தகவல் பாதுகாப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு (ISEA) திட்டத்தின் கீழ் வருகிறது, மேலும் இதனை ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து C-DAC செயல்படுத்துகிறது.
இது இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் நடைமுறைகளைப் பரப்புவதற்காக சைபர் சகிக்களை உருவாக்கும்.
கடைக்கோடி மக்களுக்கும் டிஜிட்டல் விழிப்புணர்வை ஏற்படுத்த, சுய உதவிக் குழுக்கள் (SHGs) மூலமாக சமூகம் சார்ந்த அணுகுமுறையை இது பின்பற்றுகிறது.
இத்திட்டம் மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் முதலில் தொடங்கப்பட்டு, படிப் படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
இது பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகள், இணையவழி அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் உள்ளடக்குதல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.