அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மக்களவை தொகுதி களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 இடங்களாக விரிவுபடுத்த இந்திய அரசு முன்மொழிந்துள்ளது.
மக்கள் தொகை வளர்ச்சியைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில், மாநிலங்களுக்கு 815 இடங்களும், ஒன்றியப் பிரதேசங்களுக்கு 35 இடங்களும் இந்த முன்மொழிவில் அடங்கும்.
இது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதோடு தொடர்புடையது.
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு 2029 பொதுத் தேர்தலிலிருந்து இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
தொகுதி மறுவரையறையானது மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை மீண்டும் வரையறுக்கும், இதில் 2011 ஆம் ஆண்டு அல்லது புதுப்பிக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்துவது குறித்து விவாதம் நிலவுகிறது.
அரசியலமைப்பின் 81-வது சரத்து ஆனது மக்களவையின் இயைபு மற்றும் இட ஒதுக்கீட்டை வரையறுக்கிறது.
கடைசியாக 2002 ஆம் ஆண்டில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது.
இந்த முன்மொழிவுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் தேவை.