மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ் வர்தன் eDantseva வலைத்தளம் மற்றும் கைபேசி செயலியை தொடங்கி வைத்தார்.
வாய்சம்பந்தப்பட்ட சுகாதார தகவல் மற்றும் அது சார்ந்த அறிவு பரப்பல் குறித்த முதலாவது தேசிய டிஜிட்டல் தளம் இதுவாகும்.
தேசிய வாய்வழி சுகாதாரத் திட்டம், அனைத்துவித பல் வசதிகள் மற்றும் கல்லூரிகளின் விரிவான பட்டியல், தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு, பொருள் பற்றிய தகவல்கள் இதில் உள்ளன.
பல் / வாய்வழி உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறிகள், அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் ஆகியவை பற்றிய தகவல்களை வழங்கும் ‘அறிகுறிகள் சரிபார்ப்பு’ என்ற தனித்துவமான அம்சமும் இதில் உள்ளது.
திட்டம் பற்றி
தேசிய வாய்வழி சுகாதார திட்டம் (NOHP - National Oral Health Programme) 2014 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் ஆனது NOHP ஐ செயல்படுத்துவதற்கான தேசிய சிறப்புமிகு மையமாக செயல்படுகின்றது.