TNPSC Thervupettagam

FAO – இந்தியா கூட்டாண்மை

October 24 , 2025 7 days 46 0
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமானது, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 80ம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகிறது.
  • சுதந்திரத்தின் போது உணவுப் பற்றாக்குறை உள்ள நாடாக இருந்த இந்தியா, 1.4 பில்லியன் மக்களுக்கு உணவளிக்கும் உணவு உபரி கொண்ட நாடாக மாறியுள்ளது.
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தொழில்நுட்ப ஆதரவு இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடையவும் நிலையான வேளாண் நடைமுறைகளை ஊக்குவிக்கவும் உதவியது.
  • இந்தியா உலகின் வேளாண் நிலம் மற்றும் நன்னீர் வளங்களில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே கொண்டிருந்தாலும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவுப் பாதுகாப்பைப் பேணுகிறது.
  • இந்திய வேளாண்மையின் முதுகெலும்பு அதன் 146 மில்லியன் சிறு மற்றும் குறு விவசாயிகள், பருவநிலைக்கு ஏற்ற நடைமுறைகள் மற்றும் பயிர் காப்பீடு போன்ற புதுமை நுட்பங்களால் ஆதரிக்கப் படுகிறது.
  • அக்ரிஸ்டாக் போன்ற டிஜிட்டல் முன்னெடுப்புகள் விவசாயிகளுக்கு நிகழ்நேரத் தரவுகளுடன் அதிகாரம் அளித்து, நிலையான வேளாண்மை மற்றும் பருவநிலை ஏற்பினை மேம்படுத்துகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்