TNPSC Thervupettagam

FATF சொத்து மீட்பு குறித்த புதிய வழிகாட்டுதல்

December 3 , 2025 9 days 55 0
  • மோசடி, இணையவெளிக் குற்றம், முதலீட்டு மோசடிகள் மற்றும் பணமோசடி போன்ற குற்றங்களிலிருந்து சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான புதிய உலகளாவிய வழி காட்டுதலை நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழு (FATF) வெளியிட்டது.
  • இந்த வழிகாட்டுதல் ஆனது சொத்துக்களைக் கண்டறிதல், அவற்றை முடக்குதல், அவற்றை நிர்வகித்தல் மற்றும் நாடுகள் முழுவதும் அவற்றைத் திருப்பி அனுப்புதல் ஆகிய முழு செயல்பாட்டு சுழற்சி முறையை விளக்குகிறது.
  • FATF ஆனது அக்ரி கோல்ட், இந்தியா ரியாலிட்டி & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆப்பர்சினுயூட்டிஸ் (IREO) ரியாலிட்டி மோசடி மற்றும் பிட்கனெக்ட் கிரிப்டோ மோசடி வழக்குகள் ஆகிய இந்தியாவின் வழக்கு உதாரணங்களை உள்ளடக்கியது.
  • இந்தியாவின் ரோஸ் வேலி வழக்குகள் போன்றவை இங்கு உதாரணமாக குறிப்பிடப் பட்டதுடன், இந்தப் புதிய விதிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகின்றன.
  • FATF என்பது பணமோசடி, தீவிரவாதத்திற்கான நிதியுதவி மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளைத் தடுக்க 1989 ஆம் ஆண்டில் பாரிசில் உருவாக்கப்பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்