மோசடி, இணையவெளிக் குற்றம், முதலீட்டு மோசடிகள் மற்றும் பணமோசடி போன்ற குற்றங்களிலிருந்து சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான புதிய உலகளாவிய வழி காட்டுதலை நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழு (FATF) வெளியிட்டது.
இந்த வழிகாட்டுதல் ஆனது சொத்துக்களைக் கண்டறிதல், அவற்றை முடக்குதல், அவற்றை நிர்வகித்தல் மற்றும் நாடுகள் முழுவதும் அவற்றைத் திருப்பி அனுப்புதல் ஆகிய முழு செயல்பாட்டு சுழற்சி முறையை விளக்குகிறது.
FATF ஆனது அக்ரி கோல்ட், இந்தியா ரியாலிட்டி & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆப்பர்சினுயூட்டிஸ் (IREO) ரியாலிட்டி மோசடி மற்றும் பிட்கனெக்ட் கிரிப்டோ மோசடி வழக்குகள் ஆகிய இந்தியாவின் வழக்கு உதாரணங்களை உள்ளடக்கியது.
இந்தியாவின் ரோஸ் வேலி வழக்குகள் போன்றவை இங்கு உதாரணமாக குறிப்பிடப் பட்டதுடன், இந்தப் புதிய விதிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகின்றன.
FATF என்பது பணமோசடி, தீவிரவாதத்திற்கான நிதியுதவி மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளைத் தடுக்க 1989 ஆம் ஆண்டில் பாரிசில் உருவாக்கப்பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.