FDI ஒப்புதல்களுக்கான திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
May 21 , 2026 12 days 96 0
வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, அந்நிய நேரடி முதலீட்டு (FDI) ஒப்புதல்களை வழங்குவதற்கான திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வர்த்தக அமைச்சகம் வெளியிட்டது.
திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, FDI விண்ணப்பங்களுக்கு அதிகபட்சமாக 12 வாரங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். மேலும், வெளி நாட்டு முதலீட்டு வசதி தளம் (FIFP) மற்றும் தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு (NSWS) மூலம் இச்செயல்முறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள், அதனுடன் தொடர்புடைய அமைச்சகத்தை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) அடையாளம் காணும்.
பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, சிவில் விமானப் போக்குவரத்து, விண்வெளி மற்றும் சுரங்கம் போன்ற முக்கியமான துறைகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) பாதுகாப்பு அனுமதி தேவைப்படும்.
சுமார் ₹5,000 கோடிக்கு மேல் பங்கு முதலீடு கொண்ட FDI முன்மொழிவுகளுக்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCEA) ஒப்புதல் தேவைப் படும்.
சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து வரும் முதலீடுகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு அனுமதி தேவைப்படும்.