FIG - ஜிம்நாஸ்டிக்ஸ் (உடற்பயிற்சிக் கலை) உலக சேலஞ்ச் கோப்பை
July 9 , 2018 2561 days 854 0
துருக்கியின் மெர்சினில் நடைபெற்ற FIG (Federation International de Gymnastique) ஜிம்நாஸ்டிக்ஸ் (உடற்பயிற்சிக்கலை) உலக சேலஞ்ச் கோப்பையில் இந்தியாவின் முதன்மையான ஜிம்நாஸ்டிக்ஸ் வீராங்கனையான தீபா கர்மாகர் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
உலக சேலஞ்ச் கோப்பையில் தீபாவின் முதல் பதக்கம் இதுவாகும்.
இந்தோனேசியாவின் ரிஃப்டா இர்ஃபான் அலுத்ஃபி வெள்ளி பதக்கத்தினையும் உள்ளூர் பெண்மணி கோக்சு உக்டஸ் சான்லி வெண்கல பதக்கத்தினையும் வென்றனர்.
சர்வதேச ஜிம்நாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் நாட்காட்டியில் உலக சேலஞ்ச் கோப்பை தொடர் ஒரு முக்கியமான போட்டியாகும்.