இந்தியப் பாதுகாப்புப்புத்தொழில் நிறுவனமான பிளையிங் வெட்ஜ் டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் (FWDA), இந்தியாவின் முதல் AI மூலம் இயக்கப்படும் போர் விமானத் திட்டமான FWD சுப்ரீம் லைட்டை (FWD Supreme Lite) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது எதிர்காலத் தன்னாட்சி போர் விமானங்களுக்கான தொழில்நுட்பங்களைச் சோதிக்க வடிவமைக்கப்பட்ட 250-கிலோ அளவிலான விமானத் தொழில்நுட்ப செயல் விளக்க அமைப்பாகும்.
இந்தச் செயல்விளக்க மாதிரி, விமானக் கட்டமைப்பு மேம்பாடு, அமைப்பு ஒருங்கிணைப்பு மற்றும் தரைவழிச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் பறப்பு 2026-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பெங்களூருவை தளமாகக் கொண்ட இந்தியப் பாதுகாப்பு புத்தொழில் நிறுவனமான FWDA ஆல் உருவாக்கப்படுகிறது, மேலும் இது இந்தியாவில் வடிவமைக்கப் பட்டு உருவாக்கப்பட்டது.
பரந்த FWD சுப்ரீம் தொகுப்பானது AI-இயக்கப்பட்ட தன்னாட்சி போர் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு, நிறுவனத்தின் "மாபிங்/கும்பல் தாக்குதல் கோட்பாடு" (Mobbing Doctrine) அடிப்படையிலானது.