தென் கொரியாவின் புசானில் நடைபெற்று வரும் G2 உச்சி மாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்தித்தனர்.
வர்த்தகப் போரின் தீவிரத்தினைக் குறைக்கவும், இரு நாடுகளுக்கும் இடையேயான மூலோபாய உறுதித் தன்மையை வலுப்படுத்தவும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
ஃபெண்டானில் உள்ளிட்ட சீனப் பொருட்களின் மீதான வரிகளை 20% முதல் 10% வரை குறைக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டது.
அமெரிக்க சோயா அவரைகளை பெரிய அளவில் வாங்குவதை மீண்டும் தொடங்கவும், அருமண் தாதுக்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்கவும் சீனா ஒப்புக் கொண்டது.
அருமண், காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி மற்றும் கிராஃபைட் ஆகியவற்றிற்கான பொதுவான ஏற்றுமதி உரிமங்களை சீனா வழங்கும் என்று வெள்ளை மாளிகையின் தகவல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.