G20 அமைப்பிற்காக வேண்டி இந்தியாவின் தலைமைத்துவத்திற்கான சின்னம், கருத்துரு மற்றும் இணையதளம்
May 29 , 2023
781 days
328
- G20 அமைப்பிற்காக வேண்டி இந்தியாவின் தலைமைத்துவத்திற்கான ஒரு சின்னம், கருத்துரு மற்றும் இணையதளத்தினைப் பிரதமர் வெளியிட்டார்.
- G20 சின்னமானது, இந்தியாவின் தேசியக் கொடியின் துடிப்பூட்டும் நிறங்களான காவி, வெள்ளை, பச்சை மற்றும் நீலம் போன்றவற்றை கொண்டு வடிவமைக்கப் பட்டு உள்ளது.
- சவால்களுக்கு மத்தியிலான வளர்ச்சியினைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவின் தேசிய மலரான தாமரையின் மீது புவி அமைந்தாற் போல் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
- G20 சின்னத்தின் கீழே “பாரத்” என்ற சொல் தேவநாகரி எழுத்து வடிவில் எழுதப் பட்டு உள்ளது.
- G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்திற்கான கருத்துரு "வாசுதேவக் குடும்பகம்" அல்லது "ஒரு பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்" என்பதாகும் .
- இது மகா உபநிடதம் எனப்படும் பண்டைய கால சமஸ்கிருத உரையிலிருந்து எடுக்கப் பட்டது.
- G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்திற்கான இணையதளமான www.g20.in தொடங்கி வைக்கப்பட்டது.

Post Views:
328