G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைக் காலத்திற்கான முத்திரை, கருத்துரு மற்றும் இணைய தளத்தைப் பிரதமர் வெளியிட்டார்.
G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைப் பதவி காலத்திற்கான முத்திரை, கருத்துரு மற்றும் இணைய தளம் ஆகியவை இந்தியாவின் "செய்தி மற்றும் மாபெரும் முன்னுரிமைகளை" உலகிற்கு எடுத்துரைக்கின்றன.
தற்போதைய தலைமையினை வகிக்கும் இந்தோனேசியாவிடமிருந்து டிசம்பர் 01 ஆம் தேதி இந்தப் பதவியினை இந்தியா ஏற்க உள்ளது.
G20 அல்லது குழு 20 என்பது உலகின் முக்கிய வளர்ச்சிப் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் அரசுகளுக்கிடையேயான மன்றமாகும்.
இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது.