TNPSC Thervupettagam

GBU-57 பதுங்கு குழி தாக்குதல் விமானங்கள்

July 14 , 2025 13 days 58 0
  • அமெரிக்க இராணுவமானது, முக்கியமாக ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது மிகத் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.
  • இந்தத் தாக்குதல்களின் முக்கிய அங்கமானது, GBU-57 பதுங்கு குழி வெடி குண்டுகளை  வீசிய ரேடாருக்குப் புலப்படாத B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்களால் நடத்தப் பட்டது.
  • 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற ஒரு நடவடிக்கையின் கீழ் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • ரேடாருக்குப் புலப்படாத B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள் ஆனது, ஃபோர்டோ தளத்தில் 30,000 பவுண்டு எடையுள்ள GBU-57 மாபெரும் ஆயுத ஊடுருவல் (MOP) 'பதுங்கு குழி வெடி' குண்டுகளை வீசின.
  • இது GBU-57 MOP வெடிகுண்டுகளின் முதல் செயல்பாட்டுப் பயன்பாடாகும்.
  • அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஆனது, சுமார் இரண்டு டஜன் டோமாஹாக் நிலம் சார் தாக்குதல் சீர் வேக எறிகணைகளை ஏவியது.
  • B-2 என்பது நான்கு எஞ்சின்களால் இயக்கப்படும் இரட்டைத் திறன் கொண்ட பல் பயன்பாட்டு கனரக குண்டுவீச்சு விமானமாகும்.
  • B-2 விமானத்தின் மிகவும் எளிதாக கண்டறிய முடியாத திறன் ஆனது குறைக்கப்பட்ட அகச்சிவப்பு, ஒலிசார், மின்காந்த, காட்சிப் புலம் மற்றும் ரேடார் அடையாளங்களின் கூட்டு அமைப்பிலிருந்து பெறப்படுகிறது.
  • இது அதன் முன்னோடியான BLU-109 மற்றும் GBU-28 விமானத்தினை விட அதிக சக்தி வாய்ந்தது.
  • USAF படையில் உள்ள B-2 ஸ்பிரிட் மட்டுமே 20.5 அடி, 30,000 பவுண்டு எடையுள்ள MOP வெடி குண்டினை பயன்படுத்தும் திறன் கொண்ட ஒரே விமானமாகும்.
  • GBU-57 ஆனது வெடிப்பதற்கு முன்பு நிலத்தடியில் 200 அடி வரை ஊடுருவும் திறனைக் கொண்டுள்ளது.
  • இரட்டைத் திறன் கொண்ட ஊடுருவிச் சென்று தாக்கும் திறன் கொண்ட ரேடாருக்குப் புலப்படாத குண்டுவீச்சு விமானமான அடுத்த தலைமுறை நுட்பத்திலான குண்டுவீச்சு விமானமான B-21 ரைடர் தற்போது உருவாக்க கட்டத்தில் உள்ளது.
  • B-21 ஆனது B-2 விமானத்தினைப் போன்றது, ஆனால் தனித்துவமான குவிந்த முனை கொண்ட மையத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்