2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு புத்தொழில் சூழலமைப்பில் கர்நாடகா முன்னணியில் உள்ளது.
கர்நாடகா இந்தியாவின் GenAI (உருவாக்க செயற்கை நுண்ணறிவு) புத்தொழில்களில் 39%-ஐக் கொண்டுள்ளது என்ற நிலையில் இது நாட்டில் மிக உயர்ந்த பங்காகும்.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் 890 GenAI புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 240 நிறுவனங்களிலிருந்து ஏற்பட்ட அதிகரிப்பாகும்.
2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் புத்தொழில் சூழலமைப்பு உலக அளவில் மூன்றாவது பெரிய சூழலமைப்பாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 43 மாநில அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன என்ற நிலையில் அவை ஆழமான தொழில் நுட்பம் மற்றும் GenAI புத்தொழில்களுக்குத் தேவையான திறமையான மனிதவளத்தை ஆதரிக்கின்றன.