இந்தியாவின் புவிசார் குறியீடு (GI) பெற்ற கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை மேம்படுத்துவதற்காக GI & Beyond 2.0 என்ற உச்சி மாநாடானது புது தில்லியில் நடைபெற்றது.
இந்தியக் கைத்தறிப் பொருட்களின் தெரிவுநிலை மற்றும் சந்தை அணுகலை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் கைத்தறி வரைபடம் (Digital Handloom Atlas) - "ஒரு தளம். முடிவற்ற சந்தைகள்" (One Platform. Endless Markets) தொடங்கப்பட்டது.
லடாக்கின் நம்பு ஜவுளி, லடாக் பஷ்மினா ஜவுளி, இமாச்சல குட்மா மற்றும் இமாச்சல லிங்சே ஆகியவற்றிற்கு புதிய புவிசார் குறியீட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த உச்சிமாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட புவிசார் குறியீடு பதிவு செய்யப்பட்ட கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன; கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களின் நேரடி செயல் விளக்கங்களும் இடம் பெற்றன.
இந்தியாவின் கைத்தறி ஏற்றுமதியை மேம்படுத்துவதில் 60 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு சபை (HEPC) தனது வைர விழா இலச்சினையை வெளியிட்டது.