H1B நுழைவு இசைவிற்கான தடையை நீட்டிக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இது வரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்தத் தடை கடந்த ஆண்டில் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டது.
இந்தத் தடை மார்ச் 31 ஆம் நாளோடு காலாவதியாகிவிட்டது.
H-1B என்பது குடியுரிமை பெறாதவர்களுக்கான (non - immigrant) ஒரு நுழைவு இசைவு ஆகும்.
இந்த நுழைவு இசைவு, கருத்தியல் சார்ந்த அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணி நியமனம் செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கிறது.