TNPSC Thervupettagam

HawkEye 360 தொழில்நுட்ப ஒப்பந்தம்

June 11 , 2025 2 days 32 0
  • அமெரிக்க நாடானது இந்தியாவிற்கு HawkEye 360 என்ற ​​தொழில்நுட்பத்தை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • HawkEye 360 ​​என்பது புவியின் தாழ் மட்டச் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களின் வலையமைப்பை இயக்கும் ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமாகும்.
  • இந்த செயற்கைக்கோள்கள் ஆனது கப்பல்கள், விமானங்கள், வாகனங்கள் மற்றும் கடலோர அமைப்புகளிலிருந்து வரும் சில ரேடியோ அதிர்வெண் (RF) சமிக்ஞைகளைக் கண்காணிக்கின்றன.
  • இது கண்காணிப்பிலிருந்துத் தப்பிக்க தனது தானியங்கி அடையாள அமைப்புகளை (AIS) அணைக்கும் கப்பல்களைக் கண்டறிவதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்த 'மறைவு நிலையில் உள்ள' கப்பல்கள் சர்ச்சைக்குரிய நீர்நிலைகள் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகள் நிகழும் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்கச் சவால்களை ஏற்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்