August 28 , 2025
9 days
52
- கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் நேபாள நாடானது சர்வதேசப் பெரும் பூனை இனங்களின் கூட்டணியில் (IBCA) அதிகாரப்பூர்வமாக இணைந்தது.
- IBCA என்பது உலகளவில் ஏழு பெரும்பூனை இனங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் 90க்கும் மேற்பட்ட நாடுகளின் கூட்டணியாகும்.
- நேபாளத்தில் பனிச்சிறுத்தை, புலி மற்றும் பொது வகையான சிறுத்தை ஆகியவை காணப்படுகின்றன எனவே இது உலகளாவியப் பாதுகாப்பு முன்னெடுப்புகளை மேம்படுத்துகிறது.
- நேபாள நாடானது 2009 ஆம் ஆண்டில் 121 ஆக இருந்த அந்நாட்டின் புலிகளின் எண்ணிக்கையை 2022 ஆம் ஆண்டில் 355 ஆக கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.
- பெரும் பூனை இனங்கள் காணப்படும் நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் வளப் பகிர்வை ஊக்குவிக்க இந்தியா 2023 ஆம் ஆண்டில் IBCA கூட்டணியைத் தொடங்கியது.
- உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பெரும் பூனை இனங்களின் பாதுகாப்பிற்கான கூட்டு நடவடிக்கையை இந்த கூட்டணி ஆதரிக்கிறது.
Post Views:
52