IEA இடையாண்டு மின்சார துறைத் தகவல் புதுப்பிப்பு 2025
August 10 , 2025 11 days 47 0
உலகளாவிய மின்சாரத் தேவையானது 2025 ஆம் ஆண்டில் 3.3% ஆகவும், 2026 ஆம் ஆண்டில் 3.7% ஆகவும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பதோடு இது 2015–2023 ஆம் ஆண்டுகளின் 2.6% என்ற சராசரியை விட அதிகமாகும்.
2026 ஆம் ஆண்டில் உலகளாவிய மின்சாரத் தேவை அதிகரிப்பில் சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றின் பங்கு 60% ஆக இருக்கும்.
அவற்றின் ஒருங்கிணைந்த உற்பத்தி 2026 ஆம் ஆண்டில் 6,000 TWh அளவினைத் தாண்டும் என்பதுடன் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்னழுத்த (PV) ஆற்றல், 2025 ஆம் ஆண்டில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தேவை அதிகரிப்பினைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனா மற்றும் இந்தியாவில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி குறைந்துள்ளது, ஆனால் எரிபொருள் மாற்றம் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இது அதிகரித்துள்ளது.
உலகளாவிய மின்சாரத் துறையின் CO2 உமிழ்வு ஆனது 2025 ஆம் ஆண்டில் ஒரு நிலையான மட்டத்திற்குச் செல்லும் என்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி காரணமாக 2026 ஆம் ஆண்டில் அது சற்று குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அணு மின் உற்பத்தியானது, 2025 ஆம் ஆண்டில் சாதனை அளவிலான உச்சத்தை எட்டும் பாதையில் உள்ளது.
எரிவாயு விலைகள் அதிகரித்ததன் காரணமாக 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் மொத்த மின்சார விலைகள் 30–40% உயர்ந்தன, அதே நேரத்தில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் எதிர்மறையாக விலை மதிப்பு அதிகரித்தது.