TNPSC Thervupettagam

IOS SAGAR முன்னெடுப்பு 2026

March 23 , 2026 4 days 82 0
  • பிராந்திய கடல்சார் உறவுகளை வலுப்படுத்த இந்திய கடற்படை IOS SAGAR முன்னெடுப்பின் இரண்டாவது பதிப்பைத் தொடங்கியது.
  • கூட்டுக் கடற்படை ஈடுபாட்டின் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • SAGAR என்பது பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்பதைக் குறிக்கிறது.
  • இந்த முன்னெடுப்பானது கொச்சியில் வெளிநாட்டுக் கடற்படை வீரர்களுக்கு கடற் பயணத் திறன், செயல்பாடுகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்குகிறது.
  • ஒருங்கிணைப்பை மேம்படுத்த இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் 16 உறுப்பு நாடுகளின் பங்கேற்பை இது உள்ளடக்கியது.
  • கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்ள கூட்டுக் கடல் நிலை நிறுத்தம், துறைமுக வருகைகள் மற்றும் தொடர்புகளை இந்தத் திட்டம் உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்