TNPSC Thervupettagam
October 16 , 2025 8 days 58 0
  • சுற்றுச்சூழல் இணைப்பு மற்றும் நில மறுசீரமைப்பு குறித்த உலகளாவிய நிலக் கண்ணோட்ட கருப்பொருள் சார் அறிக்கையானது அபுதாபியில் நடைபெற்ற IUCN உலக வளங்காப்பு மாநாட்டில் வெளியிடப்பட்டது.
  • இது பாலைவனமாக்கலை எதிர்ப்பதற்கான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கை (UNCCD) மற்றும் புலம்பெயர்ந்த காட்டு விலங்குகளின் வளங்காப்பிற்கான உடன்படிக்கை (CMS) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது.
  • நிலம், நீர் மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடலில் சுற்றுச்சூழல் இணைப்பைச் சேர்க்குமாறு உலக நாடுகளை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
  • சுற்றுச்சூழல் இணைப்பு என்பது உயிரினங்களின் தடையற்ற நடமாட்டம், வாழ்விடங்களின் இணைப்பு மற்றும் பூமியில் உயிரினங்களின் வாழ்வினை நிலை நிறுத்தும் இயற்கைச் செயல்முறைகளின் இயக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்