TNPSC Thervupettagam

IUCN செந்நிறப் பட்டியல் 2026 புதுப்பிப்பு

July 15 , 2026 13 days 125 0
  • இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியமானது (IUCN), உலகளாவிய உயிரினங்களின் பாதுகாப்பு நிலையை மதிப்பிட்டு, அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களின் புதுப்பிக்கப்பட்ட செந்நிறப் பட்டியல் 2026-ஐ வெளியிட்டது.
  • புதுப்பிக்கப்பட்ட இந்தப் பட்டியலில் 175,909 உயிரினங்கள் உள்ளன என்ற நிலையில்  அவற்றில் 49,505 உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.
  • ஆழ்கடல் சுரங்க நடவடிக்கைகளால் முக்கியமாக மெல்லுடலிகளில் (நத்தைகள், கிளாம்கள், சிப்பிகள், ஆக்டோபஸ் மற்றும் கணவாய் போன்றவை) 50%-க்கும் அதிகமானவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
  • தொழில்துறை வளர்ச்சி, பருவநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக பாலைவன மழைத் தவளை (பிரெவிசெப்ஸ் மேக்ரோப்ஸ்) ‘அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இன' நிலையில் இருந்து ‘எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாக' மாற்றப் பட்டுள்ளது.
  • ஆக்கிரமிப்பு பூனைகள் மற்றும் நரிகளுக்கு எதிரான பாதுகாப்பு முயற்சிகள் காரணமாக ஆஸ்திரேலியாவின் நம்பாட்/பட்டை எறும்புத்தின்னி (மிர்மெகோபியஸ் ஃபாஸியாடஸ்) ‘அருகி வரும் இன’ நிலையில் இருந்து 'அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இன' நிலைக்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்