எதிர்கால விருதுகள் எதுவும் திட்டமிடப்படாததுடன், இலக்கியத்திற்கான JCB பரிசு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டுள்ளது.
மொழியியல் பன்முகத் தன்மையை ஊக்குவிப்பதற்காகவும் மொழிபெயர்ப்புகளை இனி நன்கு அங்கீகரிப்பதற்காகவும் இந்தப் பரிசு வழங்கப்பட்டது.
இது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
JCB இந்தியா நிறுவனம் நிதியுதவி வழங்கி வந்த இந்தப் பரிசானது, இலாப நோக்கற்ற அமைப்பான JCB இலக்கிய அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.
இது ஆங்கில மொழியில் எழுதப்பட்ட புனைவுக் கதை அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்ட இந்திய மொழிப் படைப்புகளைக் கௌரவித்தது.
2018 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் இந்த விருது வென்ற ஏழு வெற்றியாளர்களில், ஐந்து பேர் மலையாளம், தமிழ் மற்றும் உருது போன்ற சில மொழிகளில் உள்ள படைப்புகளை மொழிபெயர்த்தனர்.