K.S. சிவப்பா மற்றும் K. நீலம்மா இடையிலான வழக்கு 2025
November 4 , 2025 8 days 100 0
18 வயது நிரம்பிய பிறகு, வழக்கு இல்லாமல் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் செய்யப்படும் எந்தவொரு சொத்து விற்பனை அல்லது பரிமாற்றத்தையும் எதிர்த்து சிறார்கள் வழக்கு தொடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வயது வந்தவர்கள் தாங்களே சொத்தை விற்பது அல்லது பரிமாற்றுவது போன்ற தெளிவான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அத்தகையப் பரிமாற்றங்களை ரத்து செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.
K.S. சிவப்பா மற்றும் K. நீலம்மா இடையிலான வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
1956 ஆம் ஆண்டு இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாவலர் சட்டத்தின்படி, பிறவிக்குரிய காப்பாளர் அந்த சிறாரின் நலனுக்காக செயல்பட வேண்டும்.
நீதிமன்ற அனுமதியின்றி காப்பாளர்கள் சிறாரின் அசையாச் சொத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடியாது.
கால வரையறைச் சட்டம், 1963 ஆனது, நிறை/உரிமை வயதை அடைந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தகைய சொத்துப் பரிமாற்றத்தை எதிர்த்து வழக்குத் தொடுக்கவோ அல்லது ஒதுக்கி வைக்கவோ ஒரு நபருக்கு வாய்ப்பளிக்கிறது.
அப்துல் ரஹ்மான் மற்றும் சுக்தயாள் சிங் 1905 என்ற வழக்கில் வழங்கப் பட்ட ஒரு முன்னுதாரணத்தை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.