தென் கொரியாவின் 'கொரியா மீக்கடத்து டோகாமாக் மேம்பட்ட ஆராய்ச்சி' (KSTAR) அமைப்பானது, உயர்-கட்டுப்பாட்டு முறையில் 102 விநாடிகளுக்கு பிளாஸ்மாவைத் தக்க வைத்து, அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளது.
KSTAR என்பது தென் கொரியாவின் டேஜியோனில் உள்ள கொரியா இணைவு ஆற்றல் நிறுவனத்தால் (KFE) இயக்கப்படும் ஒரு மீக்கடத்து டோகாமாக் ஆகும்; டோகாமக் அமைப்பு அணுக்கரு இணைவுக்காக பிளாஸ்மாவைக் கட்டுப்படுத்த காந்தப்புலங்களைப் பயன்படுத்துகிறது.
இது 2021 ஆம் ஆண்டில் படைத்த தனது முந்தைய சாதனையான 30 விநாடிகளை முறியடித்து, 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 48 விநாடிகள் பிளாஸ்மாவைப் பராமரித்தது.
பிளாஸ்மாவிலிருந்து வெப்பம், அசுத்தங்கள் மற்றும் வெளியேற்றத் துகள்களை அகற்றும் மற்றும் அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடிய டங்ஸ்டன் திசைமாற்றிகள் மூலம் இந்த சாதனம் மேம்படுத்தப்பட்டது.
1982 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உயர்-கட்டுப்பாட்டு முறை (H-mode), பிளாஸ்மாவிற்குள் வெப்பம் மற்றும் துகள்களைக் கட்டுப்படுத்துவதை மேம்படுத்துகிறது.